சின்னத்திரை நடிகை சந்தியா திருமண நிச்சயதார்த்தம்... ரசிகர்கள் வாழ்த்து!

By காமதேனு

சின்னத்திரை நடிகை சந்தியா- முரளி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

ஜீ தொலைக்காட்சியில் ‘சக்திவேல்’ சீரியலில் நடித்து வருகிறார் நடிகை சந்தியா. இவருக்கும் முரளி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள முரளி, ‘என்னுடைய வாழ்வில் நீ வந்ததற்கு நன்றி! நீ வந்த பின்பு, இன்னும் அதிகம் சிரிக்க ஆரம்பித்திருக்கிறேன். என்னை சரியாகப் புரிந்து கொண்டுள்ளாய் என் வருங்கால பொண்டாட்டியே’ எனக் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்ட சந்தியா நடிக்க வருவதற்கு முன்னால் பட்டிமன்ற பேச்சாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் எனப் பன்முகம் கொண்டவராக விளங்கினார். ’சத்யா’, ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ உள்ளிட்டத் தொடர்களில் நடித்தவர் இப்போது ‘சக்திவேல்’ தொடரில் நடித்து வருகிறார்.

இதில் ‘மெட்டி ஒலி’ சாந்தி இவரது மாமியாராக நடிக்கிறார். இவரின் மகன் தான் முரளி. நிஜத்திலும் இவர்கள் மாமியார்- மருமகள் ஆகப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது காதல் திருமணம் இல்லை என்பதுதான் ஹைலைட்.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE