திருமணத்திற்கு முன்பே நடிகர் சித்தார்த்தை அழ வைத்த அதிதி ராவ்!

By காமதேனு

திருமணத்திற்கு முன்பே நடிகை அதிதி ராவ், சித்தார்த்தை கண்கலங்கி அழ வைத்துள்ளார். இந்த விஷயம் அவரது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக செய்திகள் வலம் வந்த நிலையில், இதனை உறுதி செய்து இருவரும் குடும்பத்தார் முன்னிலையில் தெலங்கானாவில் உள்ள அதிதி ராவ் குடும்பத்தினரின் கோயிலில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். விரைவில் இவர்களது திருமணமும் நடைபெற இருக்கிறது.

ஹீரமண்டி

இந்நிலையில், அதிதி நடிப்பில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘ஹீரமண்டி’ தொடரைப் பார்த்துவிட்டு அழுதிருக்கிறார் சித்தார்த். 'பத்மாவத்’, ‘கங்குபாய்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் வெளியான ‘ஹீரமண்டி’ தொடரில், நடிகைகள் மனிஷா கொய்ராலா, அதிதி ராவ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.

இதைப் பார்த்துவிட்டு நடிகர் சித்தார்த் அழுதிருக்கிறார். கதை மற்றும் நடிகர்களின் சிறந்த நடிப்பு அவரை நெகிழ செய்திருக்கிறது. இதுபற்றி சமீபத்தியப் பேட்டியில் பேசிய அதிதி, “’ஹீரமண்டி’ சித்தார்த்துக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அதைப் பார்த்து முடித்ததும் அவருக்கு பேச்சே வரவில்லை. எமோஷனலாக இருந்தார்.

சித்தார்த்- அதிதி

கண்கலங்கி அழுது அவருக்கு கண்களே வீங்கி விட்டது. உடனே, இயக்குநர் சஞ்சையை சந்திக்க வேண்டும் என்று கூறினார்” என்றார் அதிதி. தன் நடிப்பின் மூலம் திருமணத்திற்கு முன்பே சித்தார்த்தை கண்கலங்க வைத்து விட்டார் அதிதி எனச் சொல்லி, ‘என்னம்மா, இப்படி பண்றீங்களேமா?’ என நெட்டிசன்கள் கலாய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE