திருமணம் தாண்டிய உறவு... போனி கபூர் சகோதரரை பொறுத்துக்கொண்ட மனைவி!

By காமதேனு

”பெண்ணாகவும் தாயாகவும் என் குழந்தைகளின் முன்னுரிமைதான் எனக்கு முக்கியம்” என்று நடிகை மஹீப் கபூர் கூறியுள்ளார்.

நடிகை மஹீப் கபூர், கடந்த 2022- ல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான ’ஃபேபுலஸ் லைவ்ஸ் ஆஃப் பாலிவுட் வைவ்ஸ்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முன்பு, நிகழ்ச்சி ஒன்றில் தனது கணவரும் நடிகருமான சஞ்சய் கபூர் திருமணம் தாண்டிய உறவு வைத்துக் கொண்டு தன்னை ஏமாற்றி விட்டார் என மஹீப் வெளிப்படையாகக் கூறினார். இருந்தாலும், தனது குழந்தைகளுக்காக தனது திருமண உறவில் இருந்து வெளியேறவில்லை என்பதையும் சொன்னார்.

குழந்தைகளுடன் சஞ்சய் கபூர்- மஹீப்

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் இந்த உண்மையை வெளிப்படுத்தியதற்காக பார்வையாளர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த எதிர்வினை பற்றி அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார். ”மக்கள் எப்போதும் ஒரு எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இங்கு யாருமே சரியானவர்கள் கிடையாது. உங்களுக்கென்று ஒரு கருத்து இருப்பது தவறில்லை. ஆனால், அதை வைத்து மற்றவர்களை அசிங்கப்படுத்தக் கூடாது” என்றார்.

மேலும், “என் கணவர் பற்றிய விஷயம் தெரிந்தபோது எனக்கு குழந்தை பிறந்தது. பெண்ணாகவும் தாயாகவும் நான் என் குழந்தைக்குதான் முன்னுரிமை கொடுப்பேன். அவர்கள் நல்ல தந்தையை இழக்கக் கூடாது என்று நினைத்தேன். என் குழந்தைகள் வீட்டிற்குள் நுழையும் போது, அமைதியும் பாதுகாப்பும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதை எனக்கும் குழந்தைகளுக்கும் சஞ்சய் கொடுத்தார்.

சஞ்சய் கபூர்- மஹீப்

தயாரிப்பாளர்கள் போனி கபூர் மற்றும் அனில் கபூரின் இளைய சகோதரர்தான் சஞ்சய் கபூர். மஹீப் மற்றும் சஞ்சய் 1997-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு முதல் குழந்தை ஷனாயா கபூர் 1999-ல் பிறந்தார். இரண்டாவதாக, 2006-ல் ஜஹான் கபூர் என்ற மகன் பிறந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE