இன்ஸ்டா ரீல்ஸூக்காக நடுரோட்டில் துப்பாக்கியைத் தூக்கிய பெண்!

By காமதேனு

சமூகவலைதளங்களில் ரீல்ஸ் மோகத்திற்காக இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது சர்ச்சையாகி இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வருபவர் சிம்ரன் யாதவ். கிட்டத்தட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்ஸை வைத்திருக்கும் இவர், சமீபத்தில் பகிர்ந்திருக்கும் ரீல்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த சிம்ரன் லக்னோ நெடுஞ்சாலையில் கையில் துப்பாக்கியோடு பாடல் ஒன்றிற்கு இந்த ரீல்ஸ் செய்து வெளியிட்டிருக்கிறார்.

’பொதுவெளியில் அதுவும் நெடுஞ்சாலையில் ஒருவர் இப்படி தனது சமூகத்தின் பெருமை பேசும் பாடலுக்கு வீடியோ வெளியிட்டிருக்கிறார். சட்டத்தையும் நடத்தை விதிகளையும் வெளிப்படையாக மீறியிருக்கிறார். ஆனால், காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கின்றனர்’ என இந்த வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்கள் கடுமையாக திட்டி வருகின்றனர்.

கடந்த வருடம் இதே போன்று, பிஸியான நெடுஞ்சாலை ஒன்றில் ஒருவர் ரீல்ஸ் செய்து வெளியிட்ட போது அதனை கண்டித்த காவல்துறை அவருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தது. ஆனால், சிம்ரன் விஷயத்தில் இன்னும் ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தில் முன்பு சிக்கிய ஜோடி

இதற்கு முன்பு, இப்படி ரீல்ஸ் மோகத்தில் காரின் மேல் ஏறி ஆடுவது, ஸ்பைடர் மேன் உடையணிந்து நடுரோட்டில் ஹெல்மெட் போடாமல் சாகசம் செய்து வண்டி ஓட்டுவது என பல விஷயங்கள் சமூகவலைதளங்களில் சர்ச்சை ஆனது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE