ரூ. 2 கோடி தர்றோம்... நச்சரித்த நிறுவனம்... தெறித்து ஓடிய சாய்பல்லவி!

By காமதேனு

நடிகை சாய்பல்லவியை எப்படியாவது தங்களது அழகு சாதன பொருட்களுக்கான விளம்பரத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் என்பதற்காக ரூ. 2 கோடி வரை சம்பளம் கொடுப்பதாக பிரபல நிறுவனம் ஒன்று அணுகி இருக்கிறது. ஆனால், ‘அதெல்லாம் வேண்டாம்!’ என்று தெறித்து ஓடியிருக்கிறார் அவர்.

க்யூட் எக்ஸ்பிரஷன்களாலும், நடன திறமையாலும் ரசிகர்களிடையே தொடர்ந்து பிடித்த நாயகியாக வலம் வருகிறார் சாய்பல்லவி. மேக்கப் சாதனங்கள் மீது பெரிதும் நாட்டமில்லாத இவர், படங்களில் நடிக்கும் போதும் கூட மிக அவசியமான கதாபாத்திரம் என்றால் மட்டுமே லேசான மேக்கப் போட்டுகொள்கிறார். நிறைய படங்களில் மேக்கப் இல்லாமலேயே வரும் சாய் பல்லவிக்கு இப்போதும் ரசிகர்களிடையே வரவேற்பு இருந்து வருகிறது.

நடிகை சாய்பல்லவி - தங்கை பூஜா கண்ணன்

இந்த பழக்கத்திற்கு காரணமாக தனது தங்கையை கை காட்டுகிறார். தங்கையை விட தான் கூடுதல் நிறமாக இருப்பதால் சின்ன வயதில் தனது தங்கைக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது என்றும் அதனால் வருத்தப்பட்ட சாய்பல்லவி இனிமேல் அழகு சாதனங்கள் வேண்டாம் என்று முடிவெடுத்ததாக ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார்.

இந்நிலையில், அவரை அழகுசாதனப் பொருளின் விளம்பரத்தில் நடிக்க வைக்க பிரபல நிறுவனம் ஒன்று அணுகியிருக்கிறது. நடிகர்கள் படங்களில் வாங்கும் சம்பளத்தைத்தான் சில நிமிடங்கள் வரும் விளம்பரத்திற்கும் சம்பளமாக வாங்குவார்கள். இதனால், விளம்பரங்களில் நடிக்க அவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியமில்லை.

சாய்பல்லவி

இதனை மனதில் வைத்து, சாய்பல்லவியை அந்த விளம்பரத்தில் நடிக்க வைக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் பேசியிருக்கிறது நிறுவனம். ஆனால், தான் நடிக்கும் படங்களிலேயே மேக்கப் போடுவதை விரும்பாத சாய்பல்லவி, இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். மேலும் கூடுதலாக பணம் தரவும் நிறுவனம் முன்வந்திருக்கிறது.

காசுக்காக பணமோசடி நிறுவன விளம்பரங்களிலும், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களிலும் நடிகர்கள் நடித்து வரும் நிலையில், தன் கருத்துக்கு எதிரான விஷயத்தை எவ்வளவு பணம் கொடுத்தும் நடிக்க மறுத்திருக்கிறார் சாய்பல்லவி.

இதையும் வாசிக்கலாமே...

பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!

494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!

பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE