தீபிகாவுடன் விவாகரத்து... முதல்முறையாக மனம் திறந்த ரன்வீர்!

By காமதேனு

நடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் இருவரும் சீக்கிரம் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி கடந்த சில நாட்களாக இணையத்தை ஆக்கிரமித்து கிடக்கிறது. இதற்கு முதல் முறையாக ரன்வீர் மனம் திறந்து பதில் சொல்லியிருக்கிறார்.

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடி நடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங். இருவரும் கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபிகா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார்.

ஆனால், ’அவர் கர்ப்ப செய்தியை அறிவித்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும் அவர் வயிறு வெளியே தெரியவில்லை என்றும் அவர் வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெறுகிறாரா?’ என்றும் ரசிகர்கள் பல சந்தேகங்களைக் கிளப்பி வந்தனர்.

தீபிகா படுகோனே

அதற்கேற்றாற் போலவே, கடந்த சில தினங்களுக்கு முன்பு ரன்வீர் சிங்கும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து தீபிகாவுடனான திருமணப் புகைப்படங்களை நீக்கினார். இதனால், இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று சர்ச்சை கிளம்பியது. ’கர்ப்பக் காலத்தில் ரன்வீர், தீபிகாவை விட்டு ஏன் பிரிய வேண்டும்?’ என்றும் ரசிகர்கள் அதிர்ச்சி ஆனார்கள்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரன்வீர் சிங் சமீபத்திய பேட்டியில், ”எங்கள் முதல் குழந்தையை வரவேற்க நாங்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம். என் வாழ்க்கையில் ரொம்பவே ஸ்பெஷலான நகைகள் என்றால் திருமணத்தின் போது எனது மனைவி எனக்குக் கொடுத்த மோதிரம் தான்” என நெகிழ்ந்துள்ளார்.

இதன் மூலம், தனது விவாகரத்து சர்ச்சைகளுக்கு ரன்வீர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுமட்டுமல்லாது, சமீபத்தில் இருவரும் மும்பை ஏர்போர்ட்டில் ஒன்றாக வந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE