சினிமா ஆசை காட்டி இளம் பெண்ணிடம் அத்துமீறிய இயக்குநர்... போலீஸார் தீவிர விசாரணை!

By காமதேனு

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த இளம்பெண்ணிடம் தமிழ் திரைப்பட இயக்குநர் ஒருவர் அத்துமீறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது போன்று இவர் பல பெண்களை சினிமா ஆசை காட்டி நாசம் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம் மாநகர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சினிமா நகர் பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் சினிமா கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவர் ’கிடா விருந்து’, ’உதய்’, ’காயம்’, ’விழித்தெழு’, ’இரவினில் ஆட்டம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் கோவையை சேர்ந்த 22 வயது இளம் பெண் இவரிடம் சினிமாவில் சேர ஆசைப்பட்டு வாய்ப்புக் கேட்டிருக்கிறார்.

பாலியல் தொல்லை

கோவையிலிருந்து புறப்பட்டு சேலம் வந்த அந்த இளம்பெண்ணை தமிழ்ச்செல்வன், லொகேஷன் பார்ப்பதாக சொல்லி ஏற்காடு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இறுதியாக சேலத்தில் உள்ள தனியார் மதுபான விடுதிக்கு அழைத்துச் சென்று மது அருந்தி உள்ளார். அந்தப் பெண்ணையும் கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்துள்ளார்.

பின்பு, மதுபான விடுதியில் இருந்து புறப்பட்டு அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு சினிமா நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்று உள்ளார். ஆனால், அந்தப் பெண் தமிழ்ச்செல்வனின் ஆசைக்கு இணங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது உதவியாளர் தமிழ் ஆகியோர் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்...

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து, சேலம் மாநகர் பள்ளப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பெண்ணை மீட்டதோடு தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது உதவியாளர் தமிழ் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் இதுபோல, பல பெண்களின் வாழ்க்கையை தமிழ்ச்செல்வன் சீரழித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. சினிமா வாய்ப்பு கேட்டு வந்த பெண்ணிடம் அத்துமீறிய இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE