நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன் இணைந்திருப்பதாக முன்பே நாம் சொல்லி இருந்தோம். இப்போது இதை அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ள படக்குழு அவருக்கு மாஸான அறிமுக வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
’நாயகன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மணி ரத்னம்- நடிகர் கமல்ஹாசன் இருவரும் ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ளனர். கமலுடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், அபிராமி, நாசர் உள்ளிட்டப் பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இடையில் தேதி பிரச்சினை காரணமாக நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் விலகினர்.
இதனால், இவர்களின் கதாபாத்திரத்தில் சிம்புவும் அருண் விஜயும் நடிப்பதாக பேசப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக, நேற்று படப்பிடிப்புத் தளத்தில் இருந்து சிலம்பரசன் கமலுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது. கமலுடன் ஒரு படமாவது இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையை முன்பு சிம்பு விருது விழா மேடை ஒன்றில் வெளிப்படுத்தியிருந்தார்.
அது நிறைவேறி விட்டதாக ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இப்போது படக்குழுவும் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பாலைவனத்தில் காவல்துறை அதிகாரியாக மாஸாக கையில் துப்பாக்கியுடன் காரில் இருக்கும் சிம்புவின் வீடியோவை வெளியிட்டு ‘நியூ தக் இன் டவுன்’ என சிலம்பரசனை ‘தக் லைஃப்’ படக்குழுவினர் வரவேற்றுள்ளனர்.
கமல்ஹாசன்- சிலம்பரசன் போர்ஷன் இந்த மாதம் 12 -ம் தேதி வரை டெல்லியில் படமாக்கப்பட இருக்கிறது. டெல்லியில் உள்ள ஹனுமன் கோயிலில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இதற்கடுத்து சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்பு லண்டனுக்கும் பறக்கிறது படக்குழு.
டெல்லியில் நடந்த படப்பிடிப்பில் அலி ஃபஸில், சன்யா மல்ஹோத்ரா, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களும் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!
பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!
உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்
பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!
பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!