+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

By காமதேனு

பள்ளிக்கல்வியை முடித்த மாணவர்களுக்கு முன்னால் இருக்கும் முதன்மையான கேள்வியே ‘அடுத்து கல்லூரியில் என்ன கோர்ஸ் எடுக்கலாம்?’ என்பது தான். மருத்துவம், பொறியியல் போன்ற முதன்மைப் படிப்புகள் தவிர்த்து மற்ற துறைகளுக்கான தேவைகளும் இங்கு இருக்கிறது. அதற்கான வேலைவாய்ப்புகளும் படித்தவர்களை சிவப்பு கம்பளத்தோடு வரவேற்கவே செய்கின்றன.

அப்படி பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என இதர துறைகள் பற்றிய வழிகாட்டுதல்களை ஆனந்தம் செல்வகுமார் காமதேனு டிஜிட்டலில் கொடுத்துள்ளார்.

அவர் பேசியதாவது, “பயாலஜி, கம்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ் எடுத்தவர்களுக்கு வேறு மாதிரியான தேடல் இருக்கும். அவர்களுக்கான வாய்ப்பு ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கும். ஆனால், காமர்ஸ் கோர்ஸ் பள்ளியில் எடுத்தவர்களுக்கு கல்லூரியில் பி. காம் மட்டும்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. இதில் பேங்கிங் மேனேஜ்மென்ட், பி. காம் ஜெனரல், பி. காம் சிஏ என நிறைய கோர்ஸ் உள்ளது. இந்த கோர்ஸ்களுக்கு நல்ல தரமான கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

பி. காம் முடித்துவிட்டு உங்களுக்கு டேலி, எக்ஸல் (Tally, Excel) போன்றவை முழுமையாகத் தெரிந்திருந்தாலே ரூ. 15,000 சம்பளத்தில் நிறைய நிறுவனங்கள் வேலை தர தயாராகவே இருக்கின்றன. இதுவே சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெரிய நகரங்களில் படித்து வெளியே வந்தால் பல நிறுவனங்கள் உங்களுக்கு ரூ. 40,000 வரையிலும் சம்பளம் கொடுக்கும்” என்றார்.

மேலும், “நீங்கள் கல்லூரி படிப்பை மட்டும் நம்பால் உங்கள் கூடுதல் திறமையையும் வளர்த்துக் கொள்வது முக்கியம். நல்ல யுனிவர்சிட்டியில் படித்து 80% மதிப்பெண்கள் வைத்திருந்தாலும் உங்களுக்கு கல்லூரி முடித்தவுடன் உடனே எல்லாம் வேலைக் கிடைத்து விடாது. MS Office, Powerpoint, Excell, Tally போன்ற அடிப்படைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதோடு பி.காம் வித் டேட்டா சயின்ஸ், பி. காம் வித் பிளாக் செயின் போன்றவற்றைப் படிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

இவற்றின் பேசிக் கோர்ஸ் எல்லாமே யூ-டியூபில் இருந்தே கற்றுக் கொள்ள முடியும். வெறும் ஏட்டுப்படிப்போடு நின்று விடாமல் இன்ட்ஸ்ட்ரி எதிர்பார்க்கும் விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறோமா என்பது தான் முக்கியம். டாக்டருக்கு இணையாக சிஏ. ஐஏஎஸ் போல ஸ்ட்ரிக்டாக இதன் தேர்வுகள் நடக்கும். அதனால், மாணவர்கள் அதற்கும் முயற்சிக்கலாம்.

பி.காம் படித்துவிட்டு மேனேஜ்மென்ட் படிக்கும் மாணவர்கள் அதிகமாகி வருகிறார்கள். அதனால், கேட் எக்ஸாம் எழுதி ஐஐடி, ஐஐஎம் போன்ற சிறந்த பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்து எம்.பி.ஏ. படித்து விடுங்கள். அவர்களே உங்களை சிறப்பாக வெளியே அனுப்புவார்கள். எம்.பி.ஏ.-வில் இன்ஸ்ஷூரன்ஸ், எல்.எல்.பி. என 60 வகையான படிப்புகள் உள்ளன. இதைத்தாண்டி டிஜிட்டல் மார்க்கெட்டிங், டூரிஸம் என ஏராளமான படிப்புகளும் உள்ளது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE