தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகியாகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருப்பவர் சின்மயி. பல புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ளது போல, சமூக வலைதளத்திலும் தனது அதிரடியான கருத்துக்களுக்காகவும், பெண் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவராகவும் உள்ளார்.
இந்நிலையில், நேற்று தான் சாலை விபத்தில் சிக்கியதாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகளுடன் சின்மயி காரில் சென்றபோது குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வந்து மோதிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இடித்துவிட்டு நிற்காமல் ஆட்டோ ஓட்டுநர் தப்பித்தும் சென்றுள்ளார். இந்த விபத்தில் தனக்கோ அல்லது தன் உடன் இருந்தவர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றும், தாங்கள் பத்திரமாக தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் சின்மயி பதிவிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...