இயக்குநரும், நடிகருமான பாரதிராஜாவின் மகன் மனோஜ் உட்பட ‘மார்கழி திங்கள்’ படக்குழுவினர் உடல் உறுப்புதானம் செய்துள்ளனர்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் 'மார்கழி திங்கள்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்க, பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சுசீந்திரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுக கலைஞர்கள் சியாம் செல்வன், ரக்ஷனா நடித்துள்ளனர். படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இதன் டீசரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், மனோஜ் உடல் உறுப்புதானம் செய்துள்ளார். இவர் மட்டுமல்லாது, ‘மார்கழி திங்கள்’ படக்குழுவைச் சேர்ந்த சுசீந்திரன், சியாம் செல்வன், நாயகிகள் நக்ஷா சரண், ரக்ஷனா உள்ளிட்ட 16 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், உடல் உறுப்புகளை தானம் செய்வதற்குரிய படிவங்களை இன்று காலை படக்குழுவினர் தம்மிடம் ஒப்படைத்ததாகவும் மனிதநேயம் மிக்க அவர்களுடைய இச்செயல் மற்றவர்களுக்கு முன்னுதாரணமானதாக இருக்கும் என்றும் பாராட்டியுள்ளார் அமைச்சர்.
உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
மகாளய பட்சம் : இன்று முதல் அடுத்த 15 நாட்களை மிஸ் பண்ணாதீங்க... பித்ரு தோஷம் நீங்க சிறந்த வழிபாடு!
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளை இப்படி தரிசித்தால் தரித்திரம் விலகும்’; செல்வம் சேரும்!
நாளை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்!
சென்னையில் அதிர்ச்சி... பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
காதல் கணவர் வேண்டும்! வீட்டின் முன்பு 35 நாட்களாக மனைவி தர்ணா!