ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

By காமதேனு

யுவன் இசையில் வெளியான ‘விசில் போடு’ பாடல் பெரிய வரவேற்புப் பெறாத நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசை சரியில்லை என விஜய் ரசிகர்கள் அவரை ரவுண்டு கட்டியுள்ளனர். இந்த சூழ்நிலையில், யுவன் தனது இன்ஸ்டா பக்கத்தை டெலிட் செய்திருக்கிறார்.

வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் அவரது தம்பி யுவன் ஷங்கர் ராஜா. வெங்கட் பிரபு விஜயுடன் இணைந்திருக்கும் 'GOAT' படத்தில் இருந்து ‘விசில் போடு’ பாடல் யுவன் இசையில் கடந்த 14-ம் தேதி வெளியானது. படத்தில் இருந்து வெளியாகும் முதல் பாடல் என்பதால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், பார்ட்டி தீமில் உருவாக்கப்பட்ட இந்தப் பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியது.

நடிகர் விஜய்

”கூகுள் கூகுள், செல்ஃபி புள்ள பாடல்களும் மெதுவாகத்தான் ரீச் ஆகின. அதுபோல இந்தப் பாடலும் ரசிகர்களுக்கு பிடிக்கும்” என பாடலை எழுதிய மதன் கார்க்கி சமாதானம் சொன்னாலும் அதைக் கேட்க ரசிகர்கள் தயாராக இல்லை.

’இதுவே, விஜய் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தால் பாடல் தாறுமாறு ஹிட்தான்’ என்றும் இணையத்தில் ரசிகர்கள் சண்டையையும் ஆரம்பித்தனர். இப்படி, வெளியான ஒரு பாடலுக்கு ஏகத்தும் யுவன் மீது நெகட்டிவிட்டி பரப்ப ஆரம்பித்து விட்டனர். இப்படியான சூழ்நிலையில்தான் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் அனைத்துப் பதிவுகளையும் நீக்கியுள்ளார்.

இப்போது அவரின் பக்கமும் இன்ஸ்டாவில் வரவில்லை. அவரது பக்கம் முடக்கப்பட்டு விட்டதா அல்லது நெகட்டிவிட்டி காரணமாக அவர் தற்காலிகமாக தனது சமூகவலைதளக் கணக்கை டிஆக்டிவேட் செய்திருக்கிறாரா என்ற விவரம் தெரியவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE