இளம் பெண்ணுடன் ஜாலியாக ஊர் சுற்றும் விஷால்... கேமராவைப் பார்த்ததும் பதறி ஓடிய வீடியோ வைரல்!

By காமதேனு

இளம் பெண் ஒருவருடன் நடிகர் விஷால் ஜாலியாக ஊர் சுற்றும்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

’சண்டக்கோழி’, ‘பூஜை’, ‘தாமிரபரணி’ ஆகிய படங்கள் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக தமிழில் வலம் வருபவர் நடிகர் விஷால். இயக்குநராகும் ஆசையில் சினிமாவுக்கு வந்தவர், இந்த விஷயத்தைத் ‘துப்பறிவாளன்2’ படம் மூலம் நிறைவேற்றி இருக்கிறார். விரைவில், இந்தப் படம் வெளியாக இருக்கிறது எனவும் தெரிவித்து இருந்தார். 46 வயதாகக்கூடிய விஷால் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய விஷாலுக்கு ஒருமுறை அனிதா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றது. இந்த நிலையில், நியூயார்க் நகரத்தில் நடிகர் விஷால் இளம் பெண் ஒருவருடன் ஜாலியாக ஊர் சுற்றுகிறார்.

அப்போது ஒருவர் இதை வீடியோ எடுக்க, ’அய்யய்யோ, பாத்துட்டாங்களே’ எனப் பதறிக் கொண்டு அணிந்திருந்த ஹூடியை தலையில் மாட்டிக் கொண்டு ஓடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. அந்தப் பெண் விஷாலின் காதலியா அல்லது படத்திற்கான படப்பிடிப்பா, புரோமோஷனா எனவும் ரசிகர்கள் சந்தேகம் கிளப்பி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து விஷால் தரப்பு விளக்கம் எதுவும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


குட்நியூஸ்... 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு; ஜனவரி 2-வது வாரத்தில் வழங்க ஏற்பாடு!

இறுதி நாட்களின் பெருந்துயரம் | இன்று நடிகை சாவித்ரி நினைவுதினம்!

வாழ்க்கையை சுழற்றிப் போட்ட சுனாமி... கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மீனவர்கள்!

பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருப்பதிக்கு ஜன.1 வரை பக்தர்கள் வரவேண்டாம்- தேவஸ்தானம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE