மீண்டும் இணைகிறது மெட்ராஸ் கூட்டணி; பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி!

By காமதேனு

இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் கார்த்தி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கார்த்தி கூட்டணியில் வெளியான திரைப்படம் மெட்ராஸ். வடசென்னை மக்களின் வாழ்கை, காதல் மற்றும் அரசியலை மையப்படுத்தி இந்த படம் வெளியானது. கார்த்தியின் சினிமா பயணத்தில் ஒரு மைல் கல்லாக இந்த படம் அமைந்தது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

நடிகர் கார்த்தி

இந்நிலையில், இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE