நான் செய்ததை ரஜினியால் செய்ய முடியுமா? - எஸ்.வி. சேகர் பரபரப்பு பேச்சு!

By காமதேனு

'நான் செய்ததை ரஜினியால் செய்ய முடியாது’ என நடிகர் எஸ்.வி.சேகர் பேசியுள்ளார்.

சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் அவர் மேடையில் பேசியிருப்பதாவது, “எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு மூன்றெழுத்து மந்திரம் தமிழ் சினிமாவை ஆள்கிறது என சொன்னால் அது ரஜினி மட்டும் தான். அந்த அளவுக்கு அவர் இந்த வயதிலும் உழைக்கிறார்.

'ஜெயிலர்' ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்தின் படம் என்றால் 1000 ரூபாய்க்கு மேல் டிக்கெட் வைத்தாலும் பார்க்க ரசிகர்கள் ரெடியா இருக்காங்க. இப்போது வெளியான அவரின் ’ஜெயிலர்’ படம் கோடிக்கணக்கில் வசூல் குவித்துள்ளதே இதற்கு சாட்சி. ஆனால், என்னுடைய சாதனையை யாராலும் முறியடிக்கவே முடியாது” என்றும் எஸ்.வி. சேகர் பேசியுள்ளார்.

ரஜினிகாந்த்

மேலும் அவர் பேசியிருப்பதாவது, “ரஜினிக்கும் எனக்கும் ஒரே வயது தான். ஆனால், அவர் இப்போ இருப்பது போல நீங்க ஏன் இல்லைன்னு என்கிட்ட கேட்க கூடாது. அவர் ரூட் தனி, என் ரூட் தனி. நாம எப்படி நல்லா இருக்குறோம்னு நினைத்து சந்தோஷப்படணுமே தவிர, மற்றவர்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமை படக்கூடாது.

நான் உலகம் முழுவதும் 7000 டிராமா ஷோஸ் போட்டிருக்கேன். இந்த சாதனையை இப்போ இருக்குற யாராலும் நினைச்சாலும் செய்ய முடியாது. ஏன் ரஜினியாலும் முடியாது” என அவர் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE