என்ன ஆச்சு எமி ஜாக்சனுக்கு... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

By காமதேனு

நடிகை எமி ஜாக்சனின் புதிய தோற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’மதராசப்பட்டினம்’ மூலம் தமிழில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், அதன் பிறகு சில படங்களில் நடித்த நிலையில், திருமணமாகி செட்டிலானார். தற்போது ‘மிஷன்’ படம் மூலம் மீண்டும் தமிழில் கம்பேக் கொடுக்க இருக்கிறார்.

இந்நிலையில், எமியின் புதிய தோற்றத்துடன் கூடிய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஒடுங்கிய கன்னம், முன்னால் மழித்தது போல காட்சியளிக்கும் தலை என எமியின் இந்த புதிய தோற்றத்தைப் பார்த்து ரசிகர்கள், ‘எமிக்கு என்ன ஆச்சு’ என விசாரித்து வருகின்றனர்.

ஆனால், மிலன் ஃபேஷன் வீக் நிகழ்வில் கலந்து கொள்ளவே எமி இந்த தோற்றத்தில் வந்திருக்கிறார் என சொல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இத்தாலியின் மிலன் நகரில் ‘மிலன் ஃபேஷன் வீக்’ நிகழ்வு நடந்து வருகிறது. இதில் திரை பிரபலங்கள், மாடல்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் பங்கேற்பது வழக்கம். இதில்தான் நடிகை எமி ஜாக்சன் தனது காதலர் எட் வெஸ்ட்விக்குடன் கலந்து கொண்டுள்ளார். எமியின் இந்தப் புகைப்படங்களை பகிர்ந்த நெட்டிசன்கள் எமி ஜாக்சனின் தோற்றம் ‘ஒப்பன் ஹெய்மர்’ படத்தில் வரும் சிலியன் மர்ஃபியின் தோற்றத்தை ஒத்திருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE