சீரன் படத்தில் உண்மை சம்பவக் கதை

By KU BUREAU

இயக்குநர் ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய துரை கே முருகன் இயக்கியுள்ள படம்,‘சீரன்’. இதில், ஜேம்ஸ் கார்த்திக், இனியா, சோனியா அகர்வால் , ‘ஆடுகளம்’ நரேன், அஜீத், கிரிஷாகுருப், ஆர்யன், அருந்ததி நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜேம்ஸ் கார்த்திக், எம்.நியாஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்.4-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் ராஜேஷ்.எம் வெளியிட்டார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

படம்பற்றி இயக்குநர் துரை கே முருகன் கூறும்போது, “தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ள ஜேம்ஸ் கார்த்திக், ஹீரோவாகவும் நடித்துள்ளார். இனியா மூன்று லுக்கில் அசத்தியிருக்கிறார். அனைவருக்கும் பிடித்தபடமாக இது இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE