சசிகுமாருடன் இணையும் சிம்ரன்

By KU BUREAU

சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்த் இயக்குகிறார். மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகும் இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் பட நிறுவனங்கள் சார்பில் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்குகிறது. சசிகுமாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE