‘குடும்பஸ்தன்’ ஆகிறார் மணிகண்டன்

By KU BUREAU

மணிகண்டன் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘குடும்பஸ்தன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ளார். சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதையை பிரசன்னா பாலச்சந்திரனும் ராஜேஷ்வர் காளிசாமியும் எழுதியுள்ளனர். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைக்கிறார். சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், ஆர். சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், கனகம்மா, ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி ராஜேஷ்வர் காளிசாமி கூறும்போது, “ ஒரு சாகச கதையை உருவாக்கலாம் என்று நினைத்தோம். இன்றைய காலகட்டத்தில் ஒருவன் பணம் சம்பாதித்து குடும்பம் நடத்துவதே பெரிய சாகசம்தான் என்று தோன்றியது. அதை வைத்தே இந்த கதையை உருவாக்கினோம். பலரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களை இன்ஸ்பிரேஷனாக கொண்டு இதன் திரைக்கதையை அமைத்திருக்கிறோம். காமெடியை மையமாகக் கொண்ட படம். புதிதாகத் திருமணமான ஜோடியாக மணிகண்டனும் சான்வே மேகனாவும் சிறப்பாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE