சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

By காமதேனு

”நம் பிரச்சினைகளைத் தீர்க்க சினிமாவில் மட்டும்தான் ஹீரோக்கள் வருவார்கள். நிஜத்தில் இல்லை” என்று இயக்குநர் ஹரி, விஷாலை வைத்து தான் இயக்கிய ‘ரத்னம்’ படம் குறித்து பேசினார்.

நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படம்

’மார்க் ஆண்டனி’ படத்திற்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் விஷால். ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ஹரியுடன் மூன்றாவது முறையாக ‘ரத்னம்’ படம் மூலம் இணைந்துள்ளார் விஷால். ஏப்ரல் 26-ம் தேதி ‘ரத்னம்’ வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் ஹரி ‘ரத்னம்’ படம் குறித்து பேசினார். ”நம்மைச் சுற்றி இருக்கும் சமுதாயத்தில் 40 சதவீதம் பேர்தான் நல்லவர்கள். மீதம் இருக்கும் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்.

இயக்குநர் ஹரி

அந்த நல்லவர்களை கெட்டவர்களிடம் இருந்து காப்பாற்றுபவன் தான் ‘ரத்னம்’. நம்முடைய வலியைப் போக்குபவன் தான் ஹீரோ. அப்படியான ரத்னம் போன்ற ஆட்களை சினிமாவில் மட்டும்தான் பார்க்க முடியும்; நிஜத்தில் இல்லை. ’சாமி’, ‘சிங்கம்’ படங்களில் எந்த அளவுக்கு நீங்கள் ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து ரசித்தீர்களோ, அதுபோலவே இந்தப் படத்திலும் வெறித்தனமான ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும்.

இப்போது என்னதான் பெரிய ஹீரோ, இயக்குநர் என்றாலும் படத்திற்கு புரமோஷன் பெரிய அளவில் தேவைப்படுகிறது. ’நான் பெரிய ஆளு!’ என்ற நினைப்பில் உட்கார்ந்திருந்தால் படம் பார்க்க யாரும் வரமாட்டார்கள்” என்று சொன்னார் ஹரி.

இதையும் வாசிக்கலாமே...

குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE