மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’ - கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

By KU BUREAU

'லவ்வர்’, 'குட்நைட்’ படங்கள் மூலம் கூடுதல் கவனம் ஈர்த்த நடிகர் மணிகண்டனின் அடுத்தப் படத்துக்கு ‘குடும்பஸ்தன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

’ஜெய்பீம்’, ‘லவ்வர்’, ‘குட்நைட்’ என அடுத்தடுத்த படங்களின் கதைத் தேர்வின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் மணிகண்டன். இவர் அடுத்து நடித்து இருக்கும் படத்துக்கு ‘குடும்பஸ்தன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. படத்தை இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமியுடன் இந்தப் படத்தில் மணிகண்டன் இணைந்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் ராஜேஷ்வர் கூறும்போது, “கோயம்புத்தூரில் இருக்கும் புதிதாக திருமணமான தம்பதிகள் பற்றிய மகிழ்வான கதை இது. குடும்பஸ்தன் ஒருவன் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வேடிக்கையான தருணங்களை சுற்றி இந்தக் கதை நடக்கிறது” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், விரைவில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ’ஜெய ஜெய ஜெய ஹே’ படப்புகழ் கனகம்மா, ஜென்சன் திவாகர் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE