ஜூனியர் என்டிஆர் வீட்டில் உறுதியான ரன்பீர் மகள் பெயர்: அலியா பகிர்ந்த சுவாரஸ்யம்

By KU BUREAU

ஜூனியர் என்டிஆர் வீட்டில் தான் தங்கள் மகளின் பெயரை இறுதி செய்ததாக நடிகை அலியா பட் தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட் தம்பதிகள் ரன்பீர்-அலியா பட்டின் மகள் ராஹா கபூருக்கு இப்போதே நிறைய ரசிகர்கள் உள்ளனர். ராஹாவின் கியூட்டான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் எப்போதும் வைரலாகும். தனது மகள் மீது வைத்திருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடாக மகள் பெயரை டாட்டூ குத்தியிருக்கிறார் ரன்பீர். இன்று ரன்பீரின் பிறந்தநாளை ஒட்டி ராஹா, அலியாபட், ரன்பீர் என குடும்பமாக வெளிநாட்டில் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

தங்கள் மகள் ராஹா பெயர் ஜூனியர் என்டிஆர் வீட்டில் தான் இறுதி செய்ததாக நடிகை அலியாபட் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். “’பிரம்மாஸ்திரா1’ படத்தின் புரோமோஷனுக்காக ஹைதராபாத் சென்றிருந்தோம். அப்போது ஜூனியர் என்டிஆர் எங்களை இரவு உணவுக்காக அழைத்திருந்தார். அங்கு சென்ற போது தான் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம், பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம் என விவாதிக்கத் தொடங்கினோம். அங்கு தான் ராஹாவின் பெயர் இறுதியானது. இந்தப் பெயருக்கு மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு, வம்சம் எனப் பல அர்த்தங்கள் உண்டு” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE