விஜய் பட வாய்ப்பை மறுத்த மலையாள நடிகர்... தீயாய் பரவும் தகவல்!

By காமதேனு

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘GOAT' படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மலையாள நடிகர், இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் மறுத்திருக்கிறார். இதற்கான காரணத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

விஜய், வெங்கட்பிரபு

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘GOAT'. அரசியல் பயணம் காரணமாக நடிகர் விஜயின் கடைசி இரு படங்களில் இதுவும் ஒன்று என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படத்தில் நடிக்கதான் மலையாள நடிகர், இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசனுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு அழைத்தும் இந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் வினீத் ஸ்ரீனிவாசன்.

இதுகுறித்து தனது சமீபத்திய பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது, “‘GOAT' படத்தில் நடிப்பதற்காக வெங்கட் பிரபு என்னை அழைத்திருந்தார். ஆனால், அந்த சமயத்தில் நான் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ என்ற படத்தில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்திற்காகக் கொடுத்த தேதிகளையும் மாற்ற முடியவில்லை. இதனால், மனசே இல்லாமல்தான் ‘GOAT' பட வாய்ப்பைத் தவிர்த்தேன். என் சூழ்நிலையை வெங்கட்பிரபுவும் புரிந்து கொண்டார்” எனக் கூறியுள்ளார்.

‘GOAT' படத்தில் நடிகர் விஜயுடன் பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். இன்று பிரபுதேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, விஜயுடன் இணைந்து பாடல் ஒன்றிற்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.

அதேபோல, இந்தப் படத்திற்கு அடுத்ததாக நடிகர் விஜய் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் ‘தளபதி 69’ படத்திற்காக ரூ. 250 கோடி சம்பளம் வாங்க இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE