காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

By காமதேனு

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் பிரேசிலியன் நடிகை லாரிஸா போனேசியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். விரைவில் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் ஆர்யன் கானின் காதல் விவகாரம் குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், பிரேசிலிய நடிகை லாரிஸா போனேசியுடன் காதலில் இருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் பர்சனல் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவர். அப்படித்தான் ஷாருக்கான் மகனும் தற்போது காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார்.

ஆர்யன் விரைவில் சினிமா இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். இதற்கான பணியில் அவர் பிஸியாக இருக்கும் சமயத்தில் அவரது சமீபத்திய சமூகவலைதள செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் அவர் காதலிக்கிறாரா என்ற சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறது. அதாவது, ஆர்யன் மற்றும் லாரிஸா இருவரும் வெளியில் செல்வது, படப்பிடிப்புத் தளத்தில் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோக்களை ரசிகர்கள் இணையத்தில் பார்த்துள்ளனர்.

இதுமட்டுமல்லாது, ஆர்யன் சமூகவலைதளங்களில் லாரிஸாவை மட்டுமல்லாது அவரது குடும்ப உறுப்பினர்களையும் பின் தொடர்கிறார். அதேபோலதான் லாரிஸாவும். மேலும், லாரிஸாவின் அம்மாவின் பிறந்தநாளுக்கு ஆர்யன் ஸ்பெஷல் பரிசும் கொடுத்துள்ளார். இதுபோன்ற விஷயங்கள்தான் ரசிகர்கள் கிசுகிசுக்க முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது.

இதற்கு முன்பு ஆர்யன் கோவா சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பரபரப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE