போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை கடந்த மாதம் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சந்தேக வளையத்தில் இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் வேறு யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்ததாக தமிழ் சினிமா தயாரிப்பாளரும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். மத்திய போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு போலீஸார் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதில் ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் உள்ள இயக்குநர் அமீர் பெயர் இந்த விவகாரம் ஆரம்பித்த நாளில் இருந்தே அடிபடுகிறது. ஏனெனில், அமீர் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பர்.
மேலும், அவர் தயாரிப்பில் 'இறைவன் மிகப்பெரியவன்' என்ற திரைப்படத்தையும் இயக்கி வந்தார். இந்த நிலையில், நாளை (ஏப்ரல் 2) டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு திரைப்பட இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கடுத்து இயக்குநர் அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், விசாரணையை எதிர்கொள்ள தான் தயாராகவே இருப்பதாகக் கூறினார். மேலும், “கொஞ்சமும் தயக்கமுன்றி என் தரப்பில் உள்ள உண்மையையும், நியாயத்தையும் எடுத்துச் சொல்லி, 100 சதவீதம் வெற்றியோடு திரும்புவேன். இறைவன் மிகப்பெரியவன்" என்றார்.
இந்நிலையில் ஜாஃபர் சாதிக்கின் இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ் திரையுலகில் முன்னணியில் உள்ள பல நடிகர், நடிகைகள் சிக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. ஜாஃபர் சாதிக்கின் படங்களில் நடித்தவர்கள் பட வேலைகள் முடிந்த பின்பு போதைப் பொருளுக்காக ஜாஃபர் சாதிக்குடன் நெருக்கம் காட்டி வந்திருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது அவர்களை படபடக்க வைத்திருக்கிறது. இதுமட்டுமல்லாது, அரசியல் தொடர்புகளும் இருப்பதால் தேர்தல் நேரத்தில் காய் நகர்த்தி பல பூதங்களும் கிளம்பும் என்கிறார்கள்.
அமீரின் விசாரணைக்குப் பிறகு ஜாஃபர் சாதிக்கின் நண்பர்கள், அவருடைய தொழில் பங்குதாரர்கள், திரைப்படத்துறையில் அவருக்கு நெருக்கமானவர்கள் ஆகியோரிடமும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையை இன்னும் இறுக்கும் எனத் தெரிகிறது.
இதையும் வாசிக்கலாமே...
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!
வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!
தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!
ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!