நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ள நடிகர் யார் என்பதை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
'இன்று நேற்று நாளை' படத்திற்குப் பிறகு இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. பல கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் இந்தப் படத்திற்கு தேவைப்படுவதால் இதன் வெளியீடு பல வருடங்களுக்கு தள்ளிப் போனது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு மீண்டும் தள்ளிப்போனது. அந்த வகையில் அடுத்த வருடம் பொங்கல் விடுமுறையை ஒட்டி 'அயலான்' வெளியாகிறது. படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.
சமீபத்தில் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வெளியான நிலையில், இந்த மாதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இதில் உள்ள ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இதற்கு முன்பு வடிவேலு உள்ளிட்டப் பல நடிகர்கள் ஏலியனுக்கு குரல் கொடுத்ததாக சொல்லப்பட்ட நிலையில் அது சித்தார்த் என்பதை தற்போது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் பொங்கல் விடுமுறைக்கான முன்பதிவு துவங்குகிறது!
அதிர்ச்சி... எண்ணூர் துறைமுகத்தில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை!
விஜய் முதல் குஷ்பு வரை.... திரையுலகில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள்!
200 ஆண்டுகள் பழமையான 220 டன் கட்டிடம் இடமாற்றம்; 700 சோப்புக்கட்டிகள் உதவியோடு சாதித்த பொறியாளர்கள்
19 வயது இன்ஸ்டா பிரபலம் மரணம்... அறுவை சிகிச்சைக்கு பின்பு நேர்ந்த துயரம்!