இதனால் தான் காதலை பிரேக் அப் செய்தேன்... வைரலாகும் 'பாண்டியன் ஸ்டோர்' நடிகை பேட்டி!

By காமதேனு

தன் நடிப்பு ஆசைக்குத் தடையாக இருந்த காரணத்தினால் தனது காதலை பிரேக் அப் செய்திருக்கிறார் நடிகை லாவண்யா. இந்தத் தகவல் இப்போது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நடிகை லாவண்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ’சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்து வந்தவர் லாவண்யா. அதன் பிறகு, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. இந்த கதாபாத்திரம் அவரை இன்னும் பல ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

படித்து முடித்துவிட்டு, வங்கியில் வேலை பார்த்து வந்தவருக்கு மாடலிங், நடிப்புத் துறையில் ஆர்வம் வந்தது. ஆரம்பத்தில் இவரது ஆசைக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் பின்பு ஒப்புக் கொண்டனர்.

நடிகை லாவண்யா

இந்த நிலையில், வங்கியில் வேலை பார்த்த போது அவருக்கு காதல் இருந்திருக்கிறது. ஆனால், லாவண்யாவின் மாடலிங், நடிப்பு ஆசை அவரது காதலருக்குப் பிடிக்காமல் போகவே அதை மறுத்திருக்கிறார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசியுள்ளார்.

அதில், “பொதுவாக பசங்க ஒரு பெண்ணைப் பிடித்திருந்தால், அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தான் நான் எதிர்பார்ப்பேன். அந்த வகையில் நான் வங்கியில் வேலை செய்த போது நான் செஞ்சது எல்லாம் என்னுடைய காதலருக்குப் பிடித்திருந்தது. ஆனால் மாடலிங் துறையில் நுழைந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது. என்னுடைய வாழ்க்கையில் நான் அடுத்த கட்டத்திற்கு போக அந்த காதல் தடையாக இருந்ததால், அவரை பிரேக் அப் செய்து விட்டேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Rajinikanth| பெயர் தந்த ஏ.வி.எம்.ராஜன்... குற்றவுணர்ச்சிக்குத் தள்ளிய அந்த சம்பவம்!

ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் பரபரப்பு...விசாரணைக்குச் சென்றவர் வெட்டிக்கொலை!

அதிரடி... விதிகளை மீறியதாக 350 மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

அதிகாலையில் பெரும் சோகம்... ஏரி உடைந்து ஊருக்குள் பாய்ந்த தண்ணீர்... அலறியடித்து ஓடிய மக்கள்!

2023-ம் ஆண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது... இவைதான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE