திரையுலகினருக்கு பேரதிர்ச்சி... நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்!

By காமதேனு

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகரான டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

டேனியல் பாலாஜி

'சித்தி' சின்னத்திரை தொடர் மூலம் நடிப்பு உலகில் அறிமுகமானவர் நடிகர் பாலாஜி. அந்தத் தொடரில் 'டேனியல்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மிகவும் பிரபலமானார். அதனால் தனது பெயருக்கு முன்னால் டேனியல் என்பதை சேர்த்துக்கொண்டு டேனியல் பாலாஜி ஆனார். அதன் மூலம் சின்ன சின்ன கதாபாத்திரங்களின் மூலம் வெள்ளி திரையிலும் தோன்ற ஆரம்பித்தார்.

'வேட்டையாடு விளையாடு' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் இவருக்கு நல்ல வேடங்கள் கிடைக்க ஆரம்பித்தது. 'காக்க காக்க' படத்தில் ஸ்ரீகாந்த், 'வேட்டையாடு விளையாடு' படத்தில் அமுதன் சுகுமாறன் என இவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 'வடசென்னை', 'பிகில்' படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

டேனியல் பாலாஜி

தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த டேனியல் பாலாஜிக்கு நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 வயதான அவரது மறைவு தமிழ் திரை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு நடிகர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE