அல்லு அர்ஜூன் பிறந்தநாள்... ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்கும் ‘புஷ்பா2’ படக்குழு!

By காமதேனு

’புஷ்பா2: தி ரூல்’ படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றியடைந்த நிலையில், இரண்டாம் பாகத்தின் டீசர் அப்டேட் ரசிகர்களை உற்சாகமடையச் செய்திருக்கிறது.

அல்லு அர்ஜூன் - சுகுமார்

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரக்கூடிய ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இதனால், படத்தின் புரோமோஷனை இப்போதிருந்தே தொடங்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இதன் முதல் படியாக படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஏப்ரல் 8, நடிகர் அல்லு அர்ஜூன் பிறந்தநாள். இதன் பொருட்டே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக டீசர் வெளியாக இருக்கிறது. கடந்த வருடம் அல்லு அர்ஜூன் பிறந்தநாளுக்கு, ‘வேர் ஈஸ் புஷ்பா?’ என்ற ஹேஷ்டேக்குடன் அல்லு அர்ஜூனின் வித்தியாசமான தோற்றம் கொண்ட டீசர் கிளிம்ப்ஸ் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா - அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா

கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘புஷ்பா1: தி ரைஸ்’. வசூல் ரீதியாக இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு மிகப்பிடித்த இன்னொரு விஷயமாக அமைந்தது நடிகை சமந்தாவின் டான்ஸ் நம்பர். ‘ஊ சொல்றியா...’ பாடலுக்கு அவர் போட்ட குத்தாட்டம் பட்டிதொட்டி எங்கும் ஹிட். இந்த இரண்டாம் பாகத்தில் சமந்தாவுக்கு பதிலாக ஸ்ரீலீலா நடனம் ஆடுகிறார். ஆனால், படத்தில் சமந்தாவும் இருக்க வேண்டும் என இயக்குநர் சுகுமார் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE