ரஜினி - கமல் புகைச்சல்... ’தலைவர்171’ போஸ்டர் வெளியீட்டு மர்மம் இதுதானா?

By காமதேனு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் ஏப்ரல் 22 வெளியாகும் என அறிவித்து புதிய போஸ்டர் நேற்று வெளியானது. ‘விக்ரம்’ படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் அப்பாதான் ரஜினியா, டைம் டிராவல் படமா என போஸ்டரை ரசிகர்கள் டீகோட் செய்து வருகிறார்கள்.

எந்தவிதமான முன்னறிவிப்போ விசேஷ நாளோ இல்லாமல் திடீரென இந்த போஸ்டர் வெளியானதற்கு பின்னணியில் ரஜினி- கமல் புகைச்சல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரஜினி-கமல்

’வேட்டையன்’ படப்பிடிப்பிற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என சொல்லப்பட்டது. இதற்கிடையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ’இனிமேல்’ இசை ஆல்பத்தில் நடிகராக அவதாரம் எடுத்ததுதான் ‘தலைவர் 171’ படம் மீது ரசிகர்களுக்கு பல சந்தேகத்தைக் கிளப்பியது.

நடிகராக லோகேஷ் கனகராஜ் பிஸியாகி விட்டார் என்றால் இனி ‘தலைவர் 171’ நடக்காதா என்று கேள்வி எழுப்பினர். மேலும், “நடிகர் கமல்ஹாசனைப் பார்த்துதான் சினிமாவிற்கே வந்தேன். அதனால், அவர் கூப்பிட்டால் எந்த வாய்ப்பையும் மறுக்க முடியாது” எனவும் கமல் மீதான அன்பையும் வெளிப்படுத்தத் தவறவில்லை லோகேஷ்.

‘தலைவர் 171’

என்னதான் ‘தலைவர் 171’ படம் நடக்கும் என லோகேஷ் தெளிவுப்படுத்தி இருந்தாலும் மேலே சொன்ன விஷயங்களால் ரஜினி டென்ஷன் ஆகிவிட்டாராம். சமீபத்தில் தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த், ஆழ்வார்ப்பேட்டை என்றால் இனி கமல்ஹாசன் இல்லை என்ற அர்த்தத்தில் கமலை வம்பிழுத்திருந்தார்.

இப்படி ரஜினி- கமல் மத்தியில் மறைமுகமாக புகைச்சல் கிளம்பியிருக்க அதை இன்னும் தீவிரப்படுத்துவது போல லோகேஷ் கனகராஜ் செயல்பாடுகள் அமைந்திருக்கிறதாம். இதனால், ‘தலைவர் 171’ படம் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் எல்லாம் ரசிகர்களுக்கு இருக்கக் கூடாது என்றுதான் அவசர அவசரமாக போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.

இதையும் வாசிக்கலாமே...

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE