நடிகை மீனாட்சி செளத்ரி தாய்லாந்தில் பாக்ஸிங் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்களைப் பகிர்ந்து, இந்த அனுபவம் அலாதியானது எனத் தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்த விஜயின் ‘GOAT' படத்திற்காகதான் இந்த பயிற்சியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் விஜய் ஆண்டனியின் ‘கொலை’, ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மீனாட்சி செளத்ரி. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். மகேஷ் பாபுவுடன் இவர் நடித்திருந்த ‘குண்டூர் காரம்’ படம் சமீபத்தில் ரிலீஸானது. இப்போது விஜயுடன் ‘GOAT' படத்தில் நடித்து வருகிறார் மீனாட்சி.
அப்பா- மகன் என விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. சமீபத்தில், கேரளா சென்று கிளைமாக்ஸூக்கான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்கடுத்து, ஒரு வெளிநாட்டு ஷெட்யூல் இருக்கும் எனவும் தெரிகிறது.
ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் இந்தப் படத்தில் ’கதாநாயகி மீனாட்சிக்கும் ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறதா?’ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்குக் காரணம் அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பாக்ஸிங் பயிற்சி எடுக்கும் புகைப்படங்கள்தான்.
தாய்லாந்து டிரிப் சென்றிருக்கும்போது அந்த நாட்டின் பாரம்பரிய கலையான தாய் பாக்ஸிங் பயிற்சி எடுத்து மகிழ்ந்திருக்கிறார் மீனாட்சி. இந்தப் புகைப்படங்கள்தான் அதில் இடம்பெற்றுள்ளன. ‘GOAT' படத்தில் இவரும் ஆக்ஷன் நாயகி அவதாரம் எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் வாசிக்கலாமே...
வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!
தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!
அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!