பிக் பாஸ் நிகழ்ச்சி செட்டில் திடீர் விபத்து!

By KU BUREAU

பிக் பாஸ் தமிழ் செட் அமைக்கும் பணியின் போது திடீர் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் அக்டோபர் 6ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. முன்பே ஒப்புக் கொண்ட படங்கள் காரணமாக இந்த எட்டாவது சீசனை தொகுத்து வழங்குவதில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகி இருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக விஜய்சேதுபதி இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். விடிவி கணேஷ், தீபக், செந்தில் உட்பட பலரது பெயர்கள் போட்டியாளர்கள் லிஸ்ட்டில் அடிபடுகிறது. போட்டியாளர்களின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் நிகழ்ச்சி துவங்கும் தினம் அன்று தெரிய வரும்.

பிக் பாஸ் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு நடைபெறுவது வழக்கம். நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஒரு வாரமே இருப்பதால், இந்த எட்டாவது சீசனுக்கும் செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உத்திரபிரதேசத்தை சேர்ந்த முகமது ஷாகின் கான் என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் கை, இடுப்பு எலும்புகள் உடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE