விஜயின் தவெகவுக்கு ஆந்தம் பாடல்: மனம் திறந்த யுவன் சங்கர் ராஜா!

By KU BUREAU

நடிகர் விஜயின் தவெக கட்சிக்கு ஆந்தம் பாடல் கேட்டால் கண்டிப்பாக இசையமைத்துத் தருவேன் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியிருக்கிறார்.

கோவையில் வருகின்ற 12ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொடர்பாக இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டளர்கள் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய யுவன் சங்கர் ராஜா ”ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களுடன், புதிய முயற்சிகளுடனும் நிகழ்ச்சி திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக இருக்கும் என நம்புகிறேன். கோவை சேர்ந்த ரசிகர்கள் மிகவும் வைப் உணர்வு கொண்டவர்கள். அவர்களின் உணர்வுகள் மூலமாக தான் நல்ல நல்ல பாடல்கள் என்னால் நிகழ்ச்சியில் பாட முடிகிறது. பழைய பாடல்கள் ரீமேக் செய்வது அவர்களின் மற்றொரு வெர்ஷனாக பார்க்கிறேன். இதனால் பாடலின் ஒரிஜினாலிட்டி கெடாது.

ஏஐ தொழில்நுட்பத்தில் உண்மைக் தன்மை இருக்காது என்று ஏ.ஆர். ரஹ்மான் கூறியது உண்மை தான். விஜய் சார் கட்சிக்கு பாடல் கேட்டால் கண்டிப்பாக செய்வேன். பழைய பாடல்களைப் பயன்படுத்துவதில் காப்பிரைட் பிரச்சினை நிச்சயம் வரும். ஆனால், முன்னதாகவே அனுமதி பெற்று பாடல்களை பயன்படுத்துவது சரியான முறையாக இருக்கும்.

'GOAT' திரைப்படத்திற்கு முன்பாக பாடல்கள் வெளியான போது ரசிகர்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு பின்பு திருத்தம் செய்தோம். விஜய் அவரது தவெக கட்சிக்கு ஆந்தம் பாடல் இசையமைத்து தரும்படி கேட்டால் நிச்சயம் செய்வேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE