'கொரோனா குமார்' டைட்டில் இனிமே இல்ல... விஷ்ணு விஷாலுக்கு ஜோடியான அதிதி!

By காமதேனு

நடிகர் சிம்பு ‘கொரோனா குமார்’ படத்தை விட்டு வெளியேறியதும் அவருக்குப் பதிலாக விஷ்ணு விஷால் நடிக்க உள்ளே வந்தார். இப்போது ‘கொரோனா குமார்’ டைட்டில் மாறுகிறது. கூடவே, விஷ்ணு விஷால் ஜோடியாக அதிதி ஷங்கரும் கமிட் ஆகியுள்ளார்.

சிம்பு- விஷ்ணு விஷால்

’இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ’ஜுங்கா’, ’சிங்கப்பூர் சலூன்’ போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கோகுல். ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் விஜய் சேதுபதியின் சுமார் மூஞ்சி குமாரு கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் ஹிட். சுமார் மூஞ்சி குமார் போலவே, ‘கொரோனா குமார்’ என்றப் படத்தை கடந்த 2021ல் அறிவித்தார் கோகுல். சிம்பு நடிக்க, ஐசரி கணேஷ் படத்தைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், சிம்பு- ஐசரி கணேஷ் மோதலால் சிம்பு படத்தில் இருந்து விலக படம் இத்தனை ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. சிம்புவுக்குப் பதிலாக விஷ்ணு விஷால் இந்தப் படத்தில் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியானது.

அதிதி ஷங்கர்...

ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய சூழலில் படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட் என்ன என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, ‘கொரோனா குமார்’ என்றிருந்த டைட்டில் இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு ‘வைப் குமார்’ என மாற்றப்பட்டுள்ளதாம். அதேபோல, கதையிலும் பல மாற்றங்கள் நடந்துள்ளது என்கிறார்கள். விஷ்ணு விஷால் ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கிறார். இன்னும் இரண்டு மாதங்களில் படப்பிடிப்புத் தொடங்கும் எனத் தெரிகிறது.

அதிதி தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி ஜோடியாக ஒரு படமும், எம். ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி ஜோடியாக ஒரு படமும் கைவசம் வைத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE