கார் ரேஸில் மீண்டும் அஜித்குமார்!

By KU BUREAU

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான அஜித்குமார், தற்போது ‘விடாமுயற்சி’ படத்தை முடித்துள்ளார். அடுத்து ‘குட் பேட் அக்லி’யில் நடித்து வருகிறார். இவர் பைக் பிரியர் என்பது தெரிந்த விஷயம்தான்.

ஆரம்பத்தில், தேசிய மோட்டார் சைக்கிள் ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற அவர், பின்னர் ஆசிய ஃபார்முலா பி.எம்.டபிள்யூ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச அளவில் முன்னேறினார். பிறகு அதைவிட்டுவிட்டு சினிமாவில் மட்டும் செலுத்தி வந்தார்.

சில வருடங்களுக்கு முன், உலக பைக் பயணத்தைத் தொடங்கிய அவர், பல்வேறு நாடுகளுக்குச் சென்றார். கடந்தவருடம் ‘ஏகே மோட்டோ ரைடு’ என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தையும் அவர் தொடங்கினார்.

இந்நிலையில் அஜித்குமார், கார் ரேஸில் மீண்டும் களமிறங்குகிறார். அடுத்த வருடம் நடைபெறும் ஐரோப்பிய ஜிடி4 (GT4) சாம்பியன்ஷிப் கார் ரேஸில் அவர் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக, பிரிட்டன், ஐரோப்பா,மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள டீம்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த அறிவிப்பைஅஜித்குமார் பின்னர் வெளியிடுவார் என்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE