நடிகர் விவேக் மகள் திருமணம்... தந்தை நினைவாக மணமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!

By காமதேனு

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் இரண்டாவது மகள் தேஜஸ்வினிக்கு நேற்று திருமணம் நடைப்பெற்றது. தனது தந்தையின் நினைவாகத் திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாகக் கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விவேக். தனது கதாபாத்திரங்களின் மூலம் மூடநம்பிக்கைகளை கேலி செய்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரது கதாபாத்திரங்களின் மூலமாக பேசப்பட்ட சமூக சீர் திருத்தக் கருத்துக்களால் ரசிகர்களால் சின்னக்கலைவாணர் என அன்புடன் அழைக்கப்பட்டார். கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட அடுத்த நாள், மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் காலமானார்.

இந்த சூழ்நிலையில், இவரது இளையமகள் தேஜஸ்வினி- பிரபு திருமணம் சென்னையில் உள்ள விவேக் இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. பின்னர் நட்சத்திர ஹோட்டலில் நடைப்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விவேக் நினைவாக விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள்...

’க்ரீன் கலாம்’ என்ற திட்டத்தின் மூலம் ஒருகோடி மரக்கன்றுகள் நடவேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தவர் நடிகர் விவேக். அதை செயல்படுத்தியும் வந்தார். அவர் நம்மிடம் இருந்து மறைந்தாலும் அவரது பணிகள் தொடர வேண்டும் என்று நினைத்த அவரது மகள் தேஜஸ்வினி, தனது தந்தையின் நினைவாக, திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், மூலிகை பூச்செடிகளைக் கொடுத்து நெகிழ வைத்துள்ளனர்.

விவேக் -அருள் செல்வி தம்பதிக்கு அமிர்த நந்தினி, தேஜஸ்வினி, பிரசன்ன குமார் என மூன்று குழந்தைகள். இதில் மகன் பிரசன்ன குமார் கடந்த 2015ஆம் ஆண்டு டெங்கு மற்றும் மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். விவேக்கின் மூத்த மகள் அமிர்த நந்தினி ஆர்க்கிட்டெக்ட்டாக உள்ளார். இரண்டாவது மகள் தேஜஸ்வினி, பிரபல வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாமே...


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE