மூன்று நாளில் ‘ஜவான்’ வசூல் எவ்வளவு தெரியுமா? - படக்குழு அதிகாரப்பூர்வ தகவல்!

By காமதேனு

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர் என முத்திரை பதித்த அட்லீ, திடீரென பாலிவுட் பக்கம் சென்றார். அவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என்றால் அது ’ஜவான்’ படம் தான்.

தன்னுடைய முதல் படத்திலேயே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். இதனால் ஜவான் படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை இந்திய நெடுக உள்ள ரசிகர்கள் வைத்திருந்தனர். ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

கலவையான விமர்சனங்களை பெற்ற ஜவான், வசூலில் முதல் நாளில் இருந்து பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ.384.69 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE