சென்னை: பிக் பாஸ்8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழின் எட்டாவது சீசனை அக்டோபர் மாதம் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்கள் காரணமாக இந்த எட்டாவது சீசனில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக நடிகர் விஜய்சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் பார்வையாளர்கள் விஜய்சேதுபதிக்கு நிகழ்ச்சியைப் பற்றியும், போட்டியாளர்கள் குறித்தும் எடுத்து சொல்வது போல சுவாரஸ்யமான புரோமோ ஒன்றை விஜய் தொலைக்காட்சி தரப்பு வெளியிட்டிருந்தது. இந்த எட்டாவது சீசனின் டேக் லைனாக ‘ஆளும் புதுசு; ஆட்டமும் புதுசு’ என்பது கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனின் போட்டியாளர்கள் விவரம் வெளியாகியுள்ளது. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை கலகலப்பாக்கிய நடிகர் விடிவி கணேஷ் பிக் பாஸ் போட்டியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நகைச்சுவை நடிகர் செந்தில், பப்லு, ரஞ்சித், பூனம் பஜ்வா, அமலா சாஜி, குரேஷி, பவித்ரா ஜனனி, சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் பெயர் அடிபடுகிறது. இதுமட்டுமல்லாது, டிடிஎஃப் வாசனின் காதலி ஷாலின் ஜோயாவும் பங்கேற்பார் எனத் தெரிகிறது. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அக்டோபர் 6ஆம் தேதி இந்தப் போட்டியாளர்கள் பட்டியல் உறுதியாகிவிடும்.
» மு.மேத்தா, பி. சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு!
» திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!