திருமணம் முடித்த கையோடு ரோபோ சங்கரின் மகள் நடிகை இந்திரஜா ஷங்கர் தனது மாமாவுடன் மதுரையில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் திருமணம் முடிந்த கையோடு மதுரையில் இருக்கும் கோயில்களுக்கு தனது மாமாவுடன் சென்று சுவாமி தரிசனம் செய்திருகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘மிஸ்டர் & மிஸஸ் கார்த்திக் என்று எதிர்பார்த்த இந்தத் தருணம் இப்போது நிறைவேறி உள்ளது. உங்கள் எல்லோருடைய ஆசிர்வாதத்தோடு இனிதே திருமணம் நடந்து முடிந்தது’ எனக் கூறியுள்ளார் இந்திரஜா.
கடந்த ஞாயிறன்று இவருக்கும் இவரது தாய் மாமன் கார்த்திக்கிற்கும் மதுரையில் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் சூரி, மதுரை முத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்திரஜாவின் திருமண பட்டுப்புடவை இரண்டு கிராம் தங்கமும் சேர்த்து நெய்யப்பட்டது எனவும் இதற்காக இரண்டு லட்சம் வரையிலும் செலவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தனது மாமாவுடன் திருமண நிச்சயமானதுமே புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்த இந்திரஜா, அதில் தங்களது திருமண ஏற்பாடுகள், நிச்சயதார்த்த வீடியோ ஆகியவற்றைத் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், சீக்கிரம் இந்த தங்கத்தால் நெய்த சேலையைப் பற்றியும் சீக்கிரம் அவரது சேனலில் வீடியோ வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!
'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!
லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!
மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!
'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!