துரை தயாநிதி சிஎம்சி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

By KU BUREAU

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முக அழகிரியின் மகனும், பிரபல தயாரிப்பாளருமான துரை தயாநிதி இன்று காலை 10.30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரை முக அழகிரியும், குடும்பத்தினரும் மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகனும், பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான துரை தயாநிதி கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு மூளைக்கு செல்லும் நரம்புகளில் ரத்தகுழாய் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரிய வந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் அனுமதிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது துரை தயாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின், வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு இரண்டு முறை நேரில் சென்று துரை தயாநிதியை சந்தித்து, உடல்நிலை குறித்து விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE