கமல் பாடல் எழுதி, ஸ்ருதி ஹாசன் - லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, இந்தப் பாடலால் ரஜினியின் ‘தலைவர் 171’ படம் கைவிடப்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு லோகேஷ் கனகராஜ் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘இனிமேல்’ பாடல் மூலம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் பாடல் வரிகளை கமல்ஹாசன் எழுதி, தயாரித்திருக்க அவரது மகள், நடிகை ஸ்ருதி ஹாசன் இசையமைத்து லோகேஷ் கனகராஜூடன் இணைந்து நடித்தும் இருக்கிறார். இதில் தான் நடிகராக வந்தது எப்படி என்றும் இதனால், ‘தலைவர் 171’ படம் கைவிடப்பட்டது என வலம் வரும் வதந்திகளுக்கும் இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் லோகேஷ் பதிலளித்துள்ளார்.
“எனக்கு நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஆனால், கமல் சார் அலுவலத்தில் இருந்து அழைப்பு வந்தபோது அதைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. அதுமட்டும் இல்லாமல், இந்தப் பாடல் எனக்கு மூன்று நாள் வேலைதான். இந்த குழுவினருடன் இதற்கு முன்பும் பணிபுரிந்துள்ளேன் என்பதால் எனக்கு வேலை எளிதாக இருந்தது” என்றார்.
மேலும், “இந்தப் பாடலில் நான் நடித்ததால், ‘தலைவர் 171’ படம் கைவிடப்பட்டது. படப்பிடிப்புத் தொடங்க தாமதமாகும் என்றெல்லாம் செய்திகள் வலம் வருகின்றன. நிச்சயமாக அதில் உண்மை இல்லை. இந்தப் படம் நான் முன்பே கமிட் செய்த விஷயம். நிச்சயம் படம் நடக்கும். இது முடித்தப் பிறகு ஒரே மாதத்தில் ‘கைதி2’ தொடங்கும். மற்றபடி, நடித்தே ஆக வேண்டும் என்பது என்னுடைய எண்ணமில்லை” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!
50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!
அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!
அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!