’தேவரா’ நிகழ்ச்சி ரத்து; ஹோட்டலை நொறுக்கிய ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள்!

By KU BUREAU

நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தேவரா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘தேவரா’ படம் இந்த வாரம் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக இன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜூனியர் என்டிஆர்-ரின் ஐம்பதாவது படம், பிரம்மாண்டமான டீசர், அனிருத் இசையில் ஹிட்டான பாடல்கள் என இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக படக்குழுவினர் அறிவித்தனர். இதற்காக ஜூனியர் என்டிஆர் வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

ஆனால், பல்வேறு இடங்களில் இருந்தும் ஜூனியர் என்டிஆரைப் பார்ப்பதற்காக கிளம்பி வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாகவே அரங்கத்திற்குள் குவிந்தனர். கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தாலும், ஜூனியர் என்டிஆரைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் முயற்சி செய்ததாலும் அங்கிருந்த கண்ணாடி கதவுகள் நொறுங்கின. மேலும், நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அறிந்த ரசிகர்கள் கோபத்திலும் ஏமாற்றத்திலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர் மற்றும் ஹோட்டலை அடித்து நொறுக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE