கின்னஸ் சாதனை படைத்தார் நடிகர் சிரஞ்சீவி!

By KU BUREAU

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

தெலுங்கில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் சிரஞ்சிவீ, திரையுலகில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர் தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள செய்தி ரசிகர்கள் ம்த்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிக திரைப்படங்களில் நடனம் ஆடியதற்காக சிரஞ்சீவிக்கு இந்த கெளரவம் கிடைத்ததுள்ளது. அதாவது 156 படங்களில் 537 பாடல்களில் 24 ஆயிரத்திற்கும் அதிகமான நடன அசைவுகளை அவர் நிகழ்த்தியுள்ளார் என்பதற்காக கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஹைதரபாத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், பாலிவுட் நடிகர் அமீர்கான் கலந்து கொண்டு சிரஞ்சீவிக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை வழங்கி கெளரவித்தார். விழாவில் பேசிய நடிகர் அமீர்கான், “சிரஞ்சிவீயின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் கடினமான நடனத்தைக் கூட எளிதாக ஆடுவது போல பார்ப்பவர்களுக்குத் தோன்றும். அவரது நடனத்தைப் பார்த்தாலே உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்ளும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE