தன் செல்ல மகளின் ஷூ எப்போதும் தனக்கு அதிர்ஷ்டம் தருவதாக பிரபல பாடகர் அதிப் அஸ்லாம் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். மகளின் முதல் பிறந்தநாளையொட்டி குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் முதன் முறையாக ரசிகர்களுடன் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்பாக்களுக்கு மகள்கள் எப்போதுமே இளவரசி தான். தனது லிட்டில் பிரின்சஸூடைய கியூட்டான குட்டி ஷூ தனக்கு எப்போதுமே அதிர்ஷடமானது என பிரபல பாகிஸ்தான் பாடகரும், நடிகருமான அதிப் அஸ்லாம் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். தனது செல்ல மகளின் முதல் பிறந்தநாளன்று இந்தப் புகைப்படத்தை அவர் பகிர்ந்து, ‘அப்பா உன்னுடைய ஷூவை எப்போதும் என் பாக்கெட்டிலேயே வைத்துக் கொள்வேன். ஏனெனில், அது எனக்கு எப்போதுமே அதிர்ஷ்டம் தரக்கூடியது’ எனக் கூறியுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு இவருக்கும் சாரா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சுயாதீன இசைப் பாடல்கள் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட்டிலும் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
இதுமட்டுமல்லாது படங்களிலும் நடித்துள்ள அதிப்பின் குரலுக்கு இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!
லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!
பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!
யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!
'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!