சென்னை: மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இந்த கூட்டணி ஒன்றிணைவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவும் இணைந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்துவதாக இருந்தது.
இப்படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்திருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதில் கமல் மற்றும் சிம்பு இருவரும் தங்கள் போர்ஷனுக்கான டப்பிங் பணியை முடித்து விட்டனர். படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி மணி ரத்னம் சிம்பு உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனியாக பார்ட்டி கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநர் சுதா கொங்கராவும் பணிபுரிந்துள்ளார் என்பதை அவரது எக்ஸ் தள பதிவு உறுதிப்படுத்தியுள்ளது. ‘மணி சாரின் உதவி இயக்குநராக பணிபுரிவது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம்’ என்பதை கூறியிருக்கிறார்.