கல்கி 2898 ஏடி படத்துக்காக உருவான எதிர்கால வாகனம்

By KU BUREAU

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதையாக உருவாகியுள்ளது. ஜூன் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்துக்காகச் சிறப்பு வாகனம் ஒன்றைப் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளனர். புஜ்ஜி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிறப்பு வாகனத்தை மகிந்திரா, கோவையிலுள்ள ஜெயம் மோட்டார்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. சியட் நிறுவனம் பிரத்யேக டயரை வடிவமைத்துள்ளது. ஆறு டன் எடையுள்ள இந்த வாகனத்தை ஹைதராபாத்தில் நடந்த விழாவில், ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினர் அறிமுகப்படுத்தினர்.

விழாவில் பேசிய நாக் அஸ்வின், “இது போன்ற எதிர்கால அம்சங்களை கொண்ட காரை வடிவமைப்பதற்கு அதிக ஆராய்ச்சி தேவைப்பட்டது. படத்தில் இந்த புஜ்ஜி முக் கிய கதாபாத்திரமாக இருக்கும்” என்றார். படத்தில் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாஸ் அதே உடையில் சிறப்பு வாக னத்தில் வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.

பிறகு அவர் பேசும்போது, “புஜ்ஜி ரொம்பவே ஸ்பெஷல். உங்களைப் போலவே நானும் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக் கிறேன். இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட அபிதாப் பச்சன், கமல்ஹாசன் இருவருக்கும் என் நன்றி. இரண்டு லெஜண்டுகளுடன் பணியாற்றியது என் அதிர்ஷ்டம்” என்றார்.

விழாவில், தயாரிப்பாளர்கள் அஸ்வினி தத், ஸ்வப்னா தத் சலசானி, பிரியங்கா தத் சலசானி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE