அரசியல் செய்யாதீங்க விஷால்... பதிலடி கொடுத்த மேயர் பிரியா!

By காமதேனு

மிக்ஜாம் புயல் குறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார். வெள்ள பாதிப்பு உங்களுக்கு மட்டுமில்லை, இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மிக்ஜாம் புயல் நேற்று சென்னையில் கடமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இது வரை புயலுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து நேற்று இரவு நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் வெள்ளம் புகுந்துள்ளதாகவும், தனது வயதான பெற்றோர் இதனால் பயந்துள்ளதாகவும் தெரிவித்தார். இது மட்டுமில்லாமல் 2015-ல் இது போன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இப்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அதே போன்ற மோசமான நிலை தொடர்வது வருத்தம் அளிக்கிறது எனவும், வரி கட்டும் குடிமகனாக தான் கேள்வி எழுப்புகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், இது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் பேசியிருந்தார்.

அத்துடன் சென்னை மாநகராடசி மேயர் பிரியா, சென்னை காவல் துறை உள்ளிட்ட பலரையும் அவர் அந்த வீடியோவில் டேக் செய்திருந்தார். இதற்கு தான் தற்போது மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் அவர், "2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது? 2015-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இல்லாமல் திறந்துவிட்டார்கள்.

அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்!" எனக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


மிக்ஜாம் புயல்... நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதி உதவி!

சென்னையில் முடங்கும் போக்குவரத்து...புறநகர் ரயில்கள் முற்றிலும் ரத்து!

புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல்.. 7 போ் உயிரிழப்பு: வெள்ளத்தில் இருந்து 10 ஆயிரம் போ் மீட்பு!

நிரம்பி வழியும் ஏரிகள்... கொசஸ்தலை, அடையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

மிக்ஜாம் புயல்... ஆந்திராவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE