நீட் தேர்வை மையப்படுத்திய ‘அஞ்சாமை’!

By KU BUREAU

நீட் தேர்வால் உருவான கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகி இருக்கும் படம், ‘அஞ்சாமை’. அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார்.

இவர் மோகன் ராஜா, லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இதில் விதார்த், வாணி போஜன், ரஹ்மான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திருச்சித்ரம் நிறுவனம் மூலம் மனநல மருத்துவர் எம்.திரு
நாவுக்கரசு தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் அனைத்து உரிமைகளையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE