எலெக்‌ஷன் நேரத்துல மூச்சு விடக்கூட பயமா இருக்கு... நடிகர் ரஜினிகாந்த் மிரட்சி!

By காமதேனு

"எனக்கு மருத்துவர்கள் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. அவர்களால்தான் நான் இங்கு இருக்கிறேன். இந்த நிகழ்வில் எனக்கு முன்னே கேமராவைப் பார்த்ததும் பயம் வந்துவிட்டது. குறிப்பாக, இது தேர்தல் நேரம் என்பதால் மூச்சுவிடக் கூட பயமாக இருக்கிறது” என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

ரஜினிகாந்த்

சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. “பொதுவாக நான் எந்தத் திறப்பு விழாவுக்கும் செல்வதில்லை. ஏனெனில், நான் அதில் பார்ட்னர், பினாமி என செய்தி கிளப்பிவிடுகின்றனர். ஆனால், இந்த மருத்துவமனை திறப்பு விழாவுக்கு நான் ஒத்துக்கொள்ளக் காரணம் நான் மருத்துவத்துறையை மதிக்கிறேன்.

தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா வரை பல மருத்துவ மனைகளைப் பார்த்த உடம்பு இது. அவர்களுடைய நவீன மருத்துவத்தால் தான் நான் இங்கு இருக்கிறேன். மருத்துவமனைக்கு நாம் நோயாளியாகப் போவோம் அல்லது நோயாளிகளைப் பார்க்கப் போவோம். நான் நோயாளியாகப் போனபோது இந்த மருத்துவமனைதான் நம்பிக்கைக் கொடுத்து என்னைக் காப்பாற்றினார்கள்” என நெகிழ்ந்து போய் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த்

தொடர்ந்து பேசிய ரஜினி, “என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தபோது மீடியா அதிகம் வரமாட்டார்கள் என்றார்கள். ஆனால், இங்கு வந்து பார்த்தபோது நிறைய கேமராக்கள். பார்த்ததும் பயமாகி விட்டது. ஏனெனில், இது தேர்தல் நேரம். மூச்சுவிடக்கூட பயமாக இருக்கிறது. இன்றைய தேதியில் யாருக்கு என்ன வியாதி வரும் என்பதை கணிக்கவே முடியவில்லை. அந்தளவுக்கு காற்று, தண்ணீர் என எல்லாமே மாசாகி விட்டது. குழந்தைகள் மருந்தில் கூட கலப்படம் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்... வேட்பாளர்களுக்கு என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?

அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு... தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

நாளை ஆழி தேரோட்டம்... ரம்மியமாக ரெடியாகும் திருவாரூர் தேர்... உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஐ.பி.எல். 2024 தொடக்க விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் இவர்கள்தான்..

’ஜப்பான்’ படுதோல்விக்கு நடிகர் கார்த்தி தான் காரணம்... சர்ச்சையைக் கிளப்பும் எழுத்தாளர் பவா செல்லதுரை பேச்சு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE