'சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் மிரட்டலான டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சிறுத்தை சிவா, நடிகர் சூர்யா இருவரும் முதல் முறையாக இணையும் படம் கங்குவா. இப்படம், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் வரலாற்று பின்னணியிலான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்திற்கான டாக்கிங் போர்ஷனின் படப்பிடிப்பு, கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்து வந்தது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. ‘பாகுபலி’ போன்று பிரம்மாண்டமான படைப்பாக ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.
படத்தை 10 சர்வதேச மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், கங்குவா படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால், டீசரை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். இதையடுத்து மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகும் என்று நேரம் மாற்றப்பட்டது. தாமதமாக வெளியான கங்குவா படத்தின் டீசர் முழுக்க ரத்தம் தெறிக்க, கோபத்தின் அனல் பறக்க, இரண்டு குழுக்களுக்கு இடையே நடக்கும் யுத்தம்தான் கதைக்களம் என்று டீசரில் தெரிகிறது.
சூர்யாவின் மிரட்டலாக கெட்டப், படத்தில் இருக்கும் பிரம்மாண்டம், அதிரடியாக பின்னணி இசை, கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவு என ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது ‘கங்குவா’ டீசர். மேலும், சிறுத்தை சிவாவின் வழக்கமான கமர்சியல் மசாலாவும் தூக்கலாகவே கங்குவா படத்தில் இருக்கும் என்றும் டீசரில் தெரிகிறது.
இதையும் வாசிக்கலாமே...
வாடிக்கையாளர்களுக்கு இன்று தான் கடைசி நாள்... பஞ்சாப் வங்கி எச்சரிக்கை!
வாயில் தீ கொண்டு ஓவியர் வரைந்த' தல' படம்... வைரலாகும் மாஸ் வீடியோ!
சவுக்கு சங்கர் மீது சாட்டையைச் சொடுக்கிய உயர் நீதிமன்றம்... வீடியோ வருமானத்தை செலுத்த உத்தரவு!
பெங்களூருவில் மீண்டும் பரபரப்பு... பள்ளி அருகே ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!
சிட்டிங் எம்பி-க்கள் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு... பரபரக்கும் திமுக வேட்பாளர் பட்டியல்!